உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தண்ணீருக்காக காத்திருக்கும் இளையான்குடி விவசாயிகள்

தண்ணீருக்காக காத்திருக்கும் இளையான்குடி விவசாயிகள்

இளையான்குடி: இளையான்குடி சுற்று வட்டார கிராம பகுதிகளில் போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகி வருவதை தொடர்ந்து தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இளையான்குடி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் குண்டு மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் செய்யப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில் மானாவாரியாக நெல் விதைகளை துாவி இருந்தனர். சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை ஓரளவுக்கு கை கொடுத்ததை தொடர்ந்து நெல் பயிர்கள் வளர துவங்கிய நிலையில் தண்ணீர் இல்லாமல் ஆங்காங்கே நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். வடக்கு சந்தனுார், தெற்கு சந்தனுார்,எஸ்.காரைக்குடி, கோச்சடை,தெ.புதுக்கோட்டை,குறிச்சி மற்றும் சுற்று வட்டார கிராமப் பகுதி நீர் நிலைகளிலும் போதிய தண்ணீர் இல்லாததோடு தொடர்ந்து மழையும் பெய்யாமல் போனதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி