மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிறுத்தம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கும் மேல் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்யாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருப்புத்துார் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்காக பலர் காத்திருந்து வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.