இந்திரா நினைவு நாள்
சிவகங்கை: சிவகங்கை எம்.பி., அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு காங்., கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சிவகங்கை நகர் காங்., தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் சுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். சிவகங்கை சட்டசபை தொகுதி பொறுப்பாளர் சோனை, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், முன்னாள் கவுன்சிலர் சண்முகராஜன், பழனிச்சாமி, முருகானந்தம், தமிழரசன், பாண்டியன், லட்சுமணன், விக்னேஸ்வரன், ஆறுமுகராஜா, சன்னாசி, ராமன், கணேசன் பங்கேற்றனர். திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் முன்னாள் பிரதமர் இந்திராவின் 41 ஆவது நினைவு தினம் ஆர்.எம்.எம்.மெட்ரிக் பள்ளியில் அனுசரிக்கப்பட்டது. தாளாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலர் குணாளன் முன்னிலை வகித்தார். மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். தேச ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு குறித்து எடுத்துக் கூறப்பட்டது. முதல்வர் பழனியப்பன் நன்றி கூறினார்.