திருப்புத்துாரில் விளக்க கூட்டம்
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகா அலுவலக கூட்ட அரங்கில் தொகுதி அளவிலான வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் கட்சியினர் அதிகாரிகளிடம் சந்தேகங்களை கேட்டறிந்தனர். அலுவலர் சிவபாலன் தலைமை வகித்தார். தாசில்தார்கள் மாணிக்க வாசகம், நாகநாதன், துணைத் தாசில்தார்கள் சரவணன், சுப்பிரமணியன்,மங்கையர்க்கரசி, சுதா பங்கேற்றனர். நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்தம் செயல்படும் வழிமுறைகள் மற்றும் பெறப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கப்பட்டது. வீடுகளில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணி நவ.3 ல் துவங்கி டிச.4 ல் நிறைவடையும். கள ஆய்வின் போது அலுவலர்கள் வாக்காளர்களுக்கு தேவையான விளக்கம் அளிப்பார்கள். அதற்கான பயிற்சி பி.எல்,ஓ., பி.எல்.ஏ., ஓட்டுசாவடி அலுவலர், ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு அளிக்கப்படுகிறது' என்றனர்.