உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் புதிய குடிநீர் திட்டத்தில் நீர் அழுத்தப் பரிசோதனை துவக்கம்

திருப்புத்துார் புதிய குடிநீர் திட்டத்தில் நீர் அழுத்தப் பரிசோதனை துவக்கம்

திருப்புத்துார் : திருப்புத்துாரில் புதிய குடிநீர் திட்டத்தில் பதிக்கப்பட்ட குழாய்களில் நீர் அழுத்தப்பரிசோதனை துவங்கியுள்ளது.திருப்புத்துார் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ 21.67 கோடி மதிப்பிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தம்பிபட்டியில் 1.5 லட்சம் லி., தென்மாப்பட்டில் 2 லட்சம் லி., கொள்ளளவில் மேல்நிலைத்தொட்டிகள், தென்மாப்பட்டு,புதுப்பட்டியில் ஒரு லட்சம் லி., கொள்ளளவில் தரைமட்டத் தொட்டிகளும் கட்டப்படுகிறது. உள்ளூர் குடிநீர் ஆதாரத்திற்காக 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்படுகிறது.குடிநீர் விநியோகத்திற்கு நகர் முழுவதும் 77.64 கி.மீ. நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. மேல்நிலைத்தொட்டிக்கு நீரேற்ற 5.8 கி.மீ.நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்படுகின்றன.தற்போது தெருக்களில் பெருமளவு குழாய் பதிப்பு பணி முடிந்துள்ளது. இதனையடுத்து பதிக்கப்பட்ட குழாய்களில் நீர் அழுத்தப்பரிசோதனை துவங்கியுள்ளது.பரிசோதனை முடிந்த குழாய்களிலிருந்து பழைய குடிநீர் இணைப்பு உள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி துவங்கியுள்ளது. அதற்கான மீட்டரும் பொருத்தி வருகின்றனர். தி.புதுப்பட்டியிலிருந்து இந்த பணிகள் நடந்து வருகின்றன. நீர் அழுத்தப் பரிசோதனை முற்றிலும் முடிந்த பின்னர் குடிநீர் விநியோகம் துவங்கும். பின்னர் பழைய காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து அவர்களது இணைப்பு துண்டிக்கப்பட்டு புதிய திட்டத்தின் கீழ் விநியோகம் தொடரும்.புதிய குடிநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களையும் பேரூராட்சியினர் வாங்கி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ