உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனைத்தையும் அகற்ற வலியுறுத்தல்

அனைத்தையும் அகற்ற வலியுறுத்தல்

திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவித்துள்ள நிலையில் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதுடன்மீண்டும் ஆக்கிரமித்தால்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புவனம் நகரில் ரோட்டின் இருபுறமும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. வியாபாரிகள் பலரும் ரோட்டில் பொருட்களை வைத்து முன்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளனர். சிலர் தெருவோர வியாபாரிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். எதிர் எதிரே பஸ், லாரி வரும் போது விலக கூட இடம் இல்லை. நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் பலரும் நிரந்தரமாக கட்டடங்கள் கட்டியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அளவீடு செய்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் கிடப்பில் போடப்பட்ட நிலையில் நாளை 4ம் தேதி அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை