உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மிளகாய், வெங்காயம் பயிருக்கு  ஜன. 31 க்குள் காப்பீடு செய்யவும்; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்  

மிளகாய், வெங்காயம் பயிருக்கு  ஜன. 31 க்குள் காப்பீடு செய்யவும்; கலெக்டர் ஆஷா அஜித் தகவல்  

சிவகங்கை; வாழை, வெங்காயம், மிளகாய் பயிர் காப்பீட்டிற்கான பிரீமிய தொகையை ஜன., 31 க்குள் செலுத்துமாறு கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது,மாவட்டத்தில் சிவகங்கை, காளையார்கோவில், இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரை விவசாயிகள் வாழை, வெங்காயம், மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். இப்பயிர்களை காப்பீடு செய்ய வாழைக்கு ஜன.,28, வெங்காயம், சிவப்பு மிளகாய்க்கு ஜன.,31க்குள் பிரீமிய தொகையை விவசாயிகள் அந்தந்த தேசிய வங்கி, தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், இ- சேவை மையங்கள் மூலம் செலுத்த வேண்டும்.வாழைக்கு எக்டேருக்கு பிரீமிய தொகை ரூ.6,249.10 செலுத்தி காப்பீடு தொகை ரூ.1,24,982 பெறலாம். வெங்காயத்திற்கு ரூ.3,587.70 செலுத்தி, காப்பீடு தொகை ரூ.71,154, சிவப்பு மிளகாய்க்கு ரூ.1,878.45 செலுத்தி காப்பீடு தொகை ரூ.62,615 பெறலாம். பயிர் காப்பீடு செய்யும் போது பயிர் சாகுபடி செய்துள்ளதற்கான ஆதாரமாக அடங்கல், பட்டா நகல், விவசாயியின் ஆதார் கார்டு நகலை இணைக்க வேண்டும்.விவசாயிகள் உரிய நேரத்திற்குள் பிரீமிய தொகையை செலுத்தி பயன்பெறலாம். மேலும் விபரம் அறிய வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை