உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதலீடு செய்தால் லாபம் ரூ.78 லட்சம் மோசடி

முதலீடு செய்தால் லாபம் ரூ.78 லட்சம் மோசடி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சக்தி 45. இவருக்கு ஜூலை 11ல் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆன்லைனில் முதலீடு குறித்து ஒரு விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள எண்ணை சக்தி தொடர்பு கொண்டார். அதில் பேசிய அடையாளம் தெரியாத நபர் ஆன்லைன் முதலீடு குறித்து பேசி நம்ப வைத்துள்ளார். அவர் பேசியதை நம்பிய சக்தி அவர் கூறிய 8 வங்கி கணக்குகளில் 10 தவணைகளாக ரூ.78 லட்சத்து 36 ஆயிரத்து 86 அனுப்பினார். பணத்தை பெற்ற அந்த நபர் முதலீடு செய்ததற்கான லாபத்தொகையை கொடுக்காமல் ஏமாற்றினார். சக்தி பணத்தை மீட்டுத்தருமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தடயங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !