மேலும் செய்திகள்
இளையான்குடியில் வறண்டு கிடக்கும் கண்மாய்
16-Dec-2024
பெரியாறு பாசன கால்வாயில் ஆண்டுதோறும் செப்., 15 முதல் ஜன., 15 வரை ஒரு போக நெல் சாகுபடிக்கு நாள் ஒன்றுக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்.அந்த வகையில் மேலுார் அருகே பாசன கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரை கட்டாணிபட்டி 1, 2 கால்வாய், 48 ம் கால்வாய், லெசீஸ், ஷீல்டு கால்வாய்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும்.அந்த வகையில் இந்த தண்ணீர் கட்டாணிபட்டி, மல்லாக்கோட்டை, அழகமாநகரி, நாமனுார், அலவாக்கோட்டை, திருமலை, வலையராதினி பட்டி, சாலுார், பாப்பாகுடி, மேலபூங்குடி, நாலுகோட்டை, சோழபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 136 கண்மாய்களை நிரப்பி 6,130 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வேண்டும்.ஒவ்வொரு ஆண்டு செப்.,15 ல் திறக்கப்படும் தண்ணரீ் முதல் 45 நாட்களுக்கு அனைத்து கால்வாய்களிலும் 60 கன அடி வீதம் திறக்கப்படும். அதற்கு பின்னர் 4 நாட்களுக்கு ஒரு கால்வாய் என முறைவைத்து வழங்கப்படுகின்றன.பெரியாறு பாசன கால்வாய் தண்ணீரை முறையாக அந்தந்த கால்வாய்களுக்கு வினியோகம் செய்வதில் பொதுப்பணித்துறையினர் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் பெரும்பாலான கால்வாய்களுக்கு முழுமையாக தண்ணீர் செல்லாமல், கால்வாய் மற்றும் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.தொடர்ந்து பெய்த மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவ மழை கைகொடுத்ததால், முழு நம்பிக்கையுடன் விவசாயிகள் நெல் நடவு செய்து காத்திருக்கின்றனர்.பெரியாறு பாசன கால்வாயில் இருந்து அனைத்து கால்வாய்க்கும் முழு அளவு தண்ணீரை வழங்கினால் மட்டுமே, வறண்டு கிடக்கும் கண்மாய்களுக்கும் தண்ணீர் சேகரமாகும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தண்ணீரின்றி வறண்ட ஷீல்டு
இது குறித்து பிரவலுார் விவசாயி சேதுராமன் கூறியதாவது: பெரியாறு கால்வாய் தண்ணீரை முறைவைத்து வினியோகம் செய்வதில்லை. கட்டாணிபட்டி 1, 2 கால்வாய்க்கு மட்டுமே முழுமையாக தண்ணீர் திறந்துள்ளனர்.மற்றபடி 48 ம் கால்வாய், லெசீஸ், ஷீல்டு கால்வாய்களுக்கு முழுமையாக தண்ணீர் வந்து சேரவில்லை. குறிப்பாக ஷீல்டு கால்வாய் தண்ணீர் காணாமல் வறண்டு கிடக்கின்றன.விரைந்து இக்கால்வாய்களை சீரமைத்து தடையின்றி பெரியாறு பாசன தண்ணீர் கண்மாய்களில் சேகரமாகும் விதத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஷீல்டு கால்வாய் கட்டுவது எப்போது
இது குறித்து சோழபுரம் விவசாயி மாரி கூறியதாவது: ஷீல்டு கால்வாய் மண் கால்வாயாக இருப்பதால் அப்பகுதிக்கு தண்ணீர் செல்வதில்லை. வறண்ட கண்மாய்களுக்கு பெரியாறு தண்ணீர் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. குறிச்சிபட்டியில் துவங்கும் ஷீல்டு கால்வாய் ஆதினிபட்டி, திருமலை, சாலுார், மேலப்பூங்குடி, பெருமாள்பட்டி வழியாக சோழபுரம் வரை 9 கி.மீ., துாரம் மண் கால்வாயாக இருப்பதால், பாசன தண்ணீர் வரமுடியாமல், கண்மாய்களுக்கு தண்ணீர் சேகரமாகவில்லை.இதற்கு அரசு ரூ.29 கோடி ஒதுக்கியுள்ளது. விரைந்து இக்கால்வாயை கான்கிரீட் கால்வாயாக தரம் உயர்த்த வேண்டும். ஜன.,ல் சிவகங்கை வரும் முதல்வர், இதற்கு அடிக்கல் நாட்ட உள்ளார் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். சிவகங்கைக்கு கூடுதல் தண்ணீர்
மேலுார் பொதுப்பணித்துறை (நீர்வள திட்டம்) செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறியதாவது, மேலுாரில் போதிய அளவு தண்ணீர் இருப்பதால் அந்த விவசாயிகளுக்கு வழங்கும் தண்ணீரையும் சேர்த்து தினமும் 60 கன அடிக்கு மேல் சிவகங்கை பாசன கால்வாய்க்கு தண்ணீரை முறைவைத்து பிரித்து தருகிறோம், என்றார்.
16-Dec-2024