மேலும் செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் இன்று ஜல்லிக்கட்டு
16-Mar-2025
சிவகங்கை : சிவகங்கை அருகே செம்பனுாரில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் குத்தியதில் 28 பேர் காயமுற்றனர். இங்கு நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் 420 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டி 6 சுற்றுக்களாக நடந்தது. இதில் மதுரை, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 700 காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.எஸ்., கோட்டை போலீஸ் ரஞ்சித் வாகனத்தில் ஏறும் போது தவறிவிழுந்து காயமுற்றார்.காளைகள் முட்டியதில் 28 பேர் காயமுற்று, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
16-Mar-2025