உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டிக்குளத்தில் மே 28ல் ஜல்லிக்கட்டு

கட்டிக்குளத்தில் மே 28ல் ஜல்லிக்கட்டு

மானாமதுரை : மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோயில் முன்புறமுள்ள வாடிவாசலில் மே 28ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இப்போட்டியில் மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. பல்வேறு வகையான பொருட்கள் பிடிபடாத மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் வழங்கப்பட உள்ளன. விழா ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். அன்று காலை முதல் அன்னதானமும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை