அய்யம்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு
சாலைக்கிராமம்: அய்யம்பட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயில் களரி உற்ஸவ விழாவை முன்னிட்டு நாளை 23ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.இதில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. ஏற்பாடுகளை அய்யம்பட்டி கிராம மக்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர். இதேபோல் மானாமதுரை பெரும்பச்சேரி மேட்டுமடை கிராமத்திலும் சமயன சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.