ஜெயந்தி விழா
காரைக்குடி; அமராவதி புதுார் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் சுவாமி ஆத்மானந்த மகராஜ் 87வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.ஆஸ்ரம அம்பாக்கள், சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராம கிருஷ்ண பிரியா அம்பா கோயிலில் சிறப்பு வழிபாடு நிகழ்த்தினர். கல்லூரி நிறுவனர் ஆத்மானந்த மகராஜ் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து கல்லூரி முதல்வர் சிவசங்கரி ரம்யா, கல்லூரி இயக்குனர் மீனலோச்சனி பேசினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மகராஜ் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வழிபாடு செய்தனர்.