உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலைஞர் கைவினை திட்டம் ரூ.3 லட்சம் வரை கடன்  கலெக்டர் தகவல்

கலைஞர் கைவினை திட்டம் ரூ.3 லட்சம் வரை கடன்  கலெக்டர் தகவல்

சிவகங்கை கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: கைவினை கலைஞர்களை தொழில் முனைவோராக்கும் முயற்சியாக அரசு ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் கலைஞர் கைவினை திட்டத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.இதில் குடும்ப தொழில் மட்டுமின்றி 25 விதமான கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியத்துடன் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். வட்டி மானியம் 5 சதவீதமும் தரப்படும்.இதில் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். கட்டட வேலை, மர வேலைப்பாடு, ஜவுளிஅச்சிடுதல், தோல் கைவினை பொருள், காலணி, மீன் வலை தயாரிப்பு, நகை செய்தல், சிகை அலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், பூட்டு தயாரித்தல் உள்ளிட்ட 25 வகையான வேலைகளுக்கு கடனுதவி வழங்கப்படும்.இதில் பயன்பெற www.msmeonline.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும். இது குறித்து பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கைக்கு நேரடியாக சென்று தெரிந்துகொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி