உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழையை எதிர்பார்த்து கல்லல் விவசாயிகள்

மழையை எதிர்பார்த்து கல்லல் விவசாயிகள்

திருப்புத்துார் : கல்லல் ஒன்றியம் கண்ணமங்கலப்பட்டியில் நெல்சாகுபடி பணிகளை துவக்க விவசாயிகள் மழைக்காக காத்திருக்கின்றனர். கல்லல் ஒன்றியம் கண்ணமங்கலப்பட்டியில் கண்மாய் நீரை நம்பி சுமார் 100 ஏக்கர் அளவில் விவசாயம் நடைபெறும். ஆண்டு தோறும் இந்தகண்மாயில் மழை நீரை சேமித்து நெல்சாகுபடிக்கு மட்டுமின்றி பொது பயன்பாட்டிற்கும் இப்பகுதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இக்கண்மாய் கரைப்பகுதியில் புதைந்துள்ள ஒரு சிற்பத்தை வைத்து கண்மாயின் நீர் கொள்ளளவை கிராமத்தினர் கணக்கிடுகின்றனர். சிற்பம் முழுவதுமாக மூழ்கினால் தேவையான மட்டத்திற்கு நீர் உள்ளதாக கருதி, வயல்களில் நெல்சாகுபடிக்கு விதைக்க துவங்கி விடுகின்றனர். இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் கண்மாயில் சிற்பம் வெளியே தெரிவதால் ஆடிப்பட்டத்திற்கு உழுதவர்கள் விதைக்காமல் மழைக்காக காத்திருக்கின்றனர். தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்ய எதிர்பார்க்கின்றனர். இப்பகுதியில் பரவலாக இந்நிலையே நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை