உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டதேவி தேரோட்டம்; சி.சி.டி.வி., மூலம் கண்காணிப்பு

கண்டதேவி தேரோட்டம்; சி.சி.டி.வி., மூலம் கண்காணிப்பு

தேவகோட்டை; தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் ஆனித் திருவிழா தொடங்கி 5 நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. ஜூலை 8ம் தேதி நடக்க உள்ள தேரோட்டத்திற்காகஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தினமும் வெவ்வேறு கிராம மண்டகப்படி பூஜை நடைபெறும் சூழலில் பக்தர்கள்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். தேரில் முகூர்த்தக்கால் (கம்பு) கட்டப்பட்டு பூஜைகளை தொடர்ந்து தேரில் துணி அலங்காரத்திற்காக கம்பு கட்டும் பணி நடந்து வருகிறது.கண்டதேவியில் ஏற்கனவே 18 சிசி டிவி கேமராக்கள் உள்ளன. மேலும் சில கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ. டி.ஜி.பி., ஆய்வு: தேரோட்டம் சுமூகமாக நடைபெற ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக நேற்று மாலை 6:30 மணிக்கு ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் ஆசீர்வாதம் கண்டதேவி வந்தார். அவருடன் எஸ்.பி., சந்தோஷ், டி.எஸ்.பிக்கள். கவுதம், பார்த்திபன் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !