எஸ்.கரிசல்குளத்தில் கஞ்சி கலய விழா
மானாமதுரை:எஸ்.கரிசல்குளம் முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு கஞ்சி கலய விழாவிற்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று அதிகாலை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கோயிலை வந் தடைந்தனர். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை அன்னதானம் நடைபெற்றது.