உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் வறட்சியில் கண்மாய்கள்

வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் வறட்சியில் கண்மாய்கள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் கண்மாய், ஊரணிகள் வறட்சிக்கு இலக்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வொன்றியத்தில் ஜெயங்கொண்டநிலை பகுதியில் ஓடும் பிரதான மழைநீர் வரத்துக் கால்வாய் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. மதுரை மாவட்டம் சருகுவலையபட்டி பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக கரம்ப ஏந்தல் வந்து அங்கிருந்து கால்வாய் வழியாக பண்டாரம் ஊருணிக்கு வருகிறது. பிறகு மறுகால் பாய்ந்து கருமாத்தூர் பெரிய கண்மாயை அடையும். இந்நிலையில் கறம்பை ஏந்தலில் இருந்து பண்டாரம் ஊருணி வரையிலான ஒன்றரை கி.மீ., நீள வரத்துக் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. சில இடங்களில் கால்வாய் இருந்த இடமே தெரியாமல் மூடப்பட்டு விட்டது. கால்வாயில் இருந்த மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன. கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் பண்டாரம் ஊருணி, கருமாத்தூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வருங்காலங்களில் இக்கண்மாய்கள் வறட்சிக்கு இலக்காகும் அபாயம் உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிதாக ஆக்கிரமிப்புகள் செய்யாதவாறு தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை