உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்ணதாசன் நினைவு நாள்

கண்ணதாசன் நினைவு நாள்

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் சிறுகூடல்பட்டியில் கண்ணதாசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.மலையரசி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எல்.எஸ். பழனியப்பன், பாரதி இலக்கியக் கழகம் எல். ஜெயச்சந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முன்னாள் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் ப.நாகராஜன்,தஞ்சை மாவட்ட சுற்றுலா அலுவலர் அ. சங்கர் , சிவகங்கை தமிழ்ச் சங்கம் நிறுவனர் கே.ஜவஹர் கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர்.ந.வைரவன்பட்டி பாரம்பரிய அருங்காட்சியகத்தில் பேராசிரியர் சி. சக்திவேல் தலைமையில் கவிதாஞ்சலி நடந்தது. கண்ணதாசன் இலக்கிய பேரவை சார்பில் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன், லெனின் கம்யூ. மாநில பொதுச்செயலாளர் கே.ஸ்டாலின், கீழச்சிவல்பட்டி காங். தலைவர் அழகு மணிகண்டன், ஆர்.எம்.எம்.மெட்ரிக் பள்ளி செயலர் குணாளன், இளைஞர் காங்., சேது.மெய்யப்பன், அம்பலகாரர் வைரவன், பேரவை செயலர் சோலையப்பன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை