உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேற்று பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தி நேர்த்தி செலுத்தினர்.இக்கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 11 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு அம்மனுக்கு காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.தினமும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. விழாவின் 9ம் நாளான மார்ச் 19 அன்று ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கி நேர்த்தி செலுத்துவர்.அன்று மாலை கோயிலில் இருந்து கரகம் புறப்பட்டு, வ.உ.சி., ரோட்டில் உள்ள பருப்பூரணியில் கரைக்கப்படும். மார்ச் 20 அன்று இரவு அம்மன் திருவீதி புறப்பாடும், மார்ச்21ல் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும்.

பால்குடம், அக்னிசட்டி நேர்த்தி

நேற்று விடுமுறை நாளாக இருப்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலில் இருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தி தேவகோட்டை ரோடு, முதல் போலீஸ் பீட், வ.உ.சி., ரோடு வழியாக கோயில் வரை சென்று நேர்த்தி செலுத்தினர். பக்தர்கள் நேர்த்தியாக கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.பங்குனி திருவிழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கினர். காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாவில் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்த பக்தர்களுக்கு செக்காலை பஜார் பள்ளிவாசல் முன் தண்ணீர் தெளித்து பக்தர்களை கோடை உஷ்ணத்தில் இருந்து குளிர்வித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை