மாநில இறகு பந்து போட்டி காரைக்குடி மாணவிக்கு வெள்ளி
காரைக்குடி: மாநில அளவில் பள்ளி மாணவிகளுக்கான இறகு பந்து போட்டியில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி வெள்ளி பதக்கம் பெற்றார். மயிலாடுதுறையில் இறகு பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. இதில் வயது 19க்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இதில் காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவி ராஜராஜேஸ்வரி வெள்ளி பதக்கம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைவர் சேதுராமன், முதன்மை முதல்வர் அஜய்யுக்தேஷ், இறகு பந்து கழக தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பாரூக் உள்ளிட்டோர் பாராட்டினர்.