அரியக்குடியில் கிடா முட்டு விழா
காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிடா முட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் சிவகங்கை , ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வெள்ளை, செவலை, குரும்பை பிரிவுகளை சேர்ந்த 50 ஜோடி கிடாக்கள் பங்கேற்றன. இந்த போட்டியில் ஒவ்வொரு கிடாயும் 60 முறை மற்றொரு கிடாயை முட்ட வேண்டும். அந்த கிடாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.