ஆசிரியரை வெட்டி வழிப்பறி
சிவகங்கை: சிவகங்கை அருகே அழகுமெய்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் 43. கூட்டுறவுபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார். ஆக.11 மதியம் 2:30 மணிக்கு முத்துாருக்கு டூவீலரில் அய்யனார்குளம் வழியாக சென்றார். வழியில் மறித்த 4 பேர் அவரை வாளால் வெட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், மோதிரம் ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பினர். அவர் காளையார்கோவில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். காளையார்கோவில் போலீசார் நேற்று மானாமதுரை அருகே உள்ள முருகபஞ்சானை சேர்ந்த முனீஸ்வரனை கைது செய்தனர்.