மேலும் செய்திகள்
முத்தாலம்மன் கோயில் திருவிழா தொடக்கம்
15-Jul-2025
தேவகோட்டை : தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா வரும் 21 ந்தேதி மாலை 6:00 மணியளவில் மேடை போடுதலுடன் தொடங்குகிறது. மறுநாள் கோட்டையம்மனுக்கு காப்புக் கட்டப்பட்டு முதல் பொங்கலிட்டு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 14 தினங்கள் பீடத்திற்கு காலை மாலை இரு நேரமும் அபிஷேகங்கள் , ஆராதனை நடைபெறுகிறது. 25ந் தேதி பால்குடமும், மாலை பூத்தட்டு ஊர்வலமும் நடைபெறுகிறது. 29 ந்தேதி பகலில் புள்ளி பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கானோர் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபடுவர்.
15-Jul-2025