உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

மானாமதுரை: மானாமதுரை அழகாபுரி நகர் மாரியம்மன் கோயில் திருப்பணி முடிவு பெற்றதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமானது.இதனைத் தொடர்ந்து நான்கு கால பூஜையும், நேற்று காலை கும்பாபிஷேகத்திற்காக மகா பூர்ணாஹூதி நடைபெற்று மேள,தாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கோபுர கலசங்களுக்கு கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை