உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழா

இளையான்குடி: குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட முட்டகுறிச்சி பத்ரகாளியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு ஜூன் 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.ஜூன் 6ம் தேதி காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 4:00 மணிக்கு முதலாம் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.ஜூன் 7ம் தேதியும், 8ம் தேதி அதிகாலை வரை 3 கால யாகசாலை பூஜைகளும், காலை 10:30 மணியிலிருந்து 11:00 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது.ஏற்பாடுகளை ஹிந்து சத்ரிய நாடார் உறவின்முறையாளர்கள் மற்றும் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ