உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேம்பத்துார் கலிதீர்த்த அய்யனார் கோயிலில் மே 4ல் கும்பாபிஷேகம்

வேம்பத்துார் கலிதீர்த்த அய்யனார் கோயிலில் மே 4ல் கும்பாபிஷேகம்

மானாமதுரை: மானாமதுரை அருகேயுள்ள வேம்பத்துார் பூர்ண புஷ்கலா தேவி உடனுறை கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் மே 4ம் தேதி நடக்கிறது.இக் கிராமத்தில் பழமை வாய்ந்த காவல் தெய்வமான பூர்ண,புஷ்கலா தேவி உடனுறை கலிதீர்த்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நிறைவு பெற்றது. முன்னதாக மே 3ம் தேதி சனிக்கிழமை காலை 8:00 மணிக்கு அனுக்ஞை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை ஆரம்பமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து நவக்கிரக ஹோமம், புண்யாஹ வாசனம்,வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம்,த்வார பூஜை,வேதிகா பூஜை வேதபாராயணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று மே4ம் தேதி அதிகாலை பூர்ணாஹூதி நடைபெற்று காலை 5:00 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை, அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை வேம்பத்துார் கிராம பொதுமக்கள், திருப்பணி கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ