உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாசன நிலம் குறைந்து விவசாயிகள் வெளியேறும் அவலம்

பாசன நிலம் குறைந்து விவசாயிகள் வெளியேறும் அவலம்

மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு முன்புறம் 300 ஏக்கரில் இருந்த வண்ணான்குளம் கண்மாய் நீரால் 40ஆண்டுகளுக்கு முன்பு வரை 100 ஏக்கரில்விவசாயிகள் விவசாயம் செய்தனர். நிலத்தடி நீர்மட்டமும் நன்றாக இருந்தது.மழைநீர் சேகரமாகும்நீர்பிடிப்பு பகுதி, வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பு, பருவநிலை மாற்றம், போதிய மழையின்மையால் தற்போது கண்மாய்க்கு தண்ணீர் வருவது படிப்படியாக குறைந்து விட்டது. விவசாயிகள் விவசாயம் செய்யாததால் ஆக்கிமிப்பாளர்கள் நீர்நிலையை ஆக்கிரமித்ததால் தற்போது பல கண்மாய்கள் இருந்த இடமே தெரியாமல் கழிவு நீர் தேங்கும் குட்டை போல உள்ளது. விளை நிலங்கள் இருந்த பகுதி வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு ஏராளமானோர் வீடுகளை கட்டியுள்ளனர். இக்கண்மாயிலிருந்து தண்ணீர் வெளியேறும் வரத்து கால்வாய் மற்றும் நீர்வழித்தடம் மறைந்ததால் நீண்ட வருடங்களாக கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீர் கழிவுநீராக மாறி இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மக்களும் இந்த கண்மாய் பகுதிகளில் மக்களும் குப்பை கொட்ட ஆரம்பித்து விட்டனர். வண்ணான் குளம் கண்மாயை ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டடங்களை அகற்றி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இப்பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு உருவாகாதவாறு கண்மாயை தூர்வாரி கரைகளில் ரோடு அமைக்க வேண்டும் என்று மக்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதேபோன்று கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயில் அருகே அமைந்துஉள்ள கண்மாயும் ஆக்கிரமிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கண்மாய் சுருங்கி குட்டை போல கழிவு நீர் நிரம்பி காணப்படுகிறது. இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட தேவூரணியில் சில ஆண்டுகளுக்கு முன் ரூ.1கோடி மதிப்பீட்டில் தூர்வாரும்பணி நடைபெற்று பூங்கா உருவாக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களாக எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாத காரணத்தினால் தற்போது அதில் கழிவு நீர் மட்டுமே தேங்கி வருகிறது. மாவட்ட நிர்வாகம் கண்மாய், ஊருணி மற்றும்நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ