உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காது வேலை செய்ய மாட்டேங்குது கோர்ட் தீர்ப்பு குறித்த கேள்விக்கு இல.கணேசன் பதில்

காது வேலை செய்ய மாட்டேங்குது கோர்ட் தீர்ப்பு குறித்த கேள்விக்கு இல.கணேசன் பதில்

காரைக்குடி:தமிழக கவர்னர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, காது வேலை செய்ய மாட்டேங்குது, மெஷின் பொருத்த வேண்டும் என, நகைச்சுவையுடன் கூறியபடி நாகலாந்து கவர்னர் இல.கணேசன் கடந்து சென்றார்.காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் நடந்த கம்பன் திருநாள் நிகழ்ச்சியில் நாகலாந்து கவர்னர் இல. கணேசன் கலந்து கொண்டார். நேற்று காலை பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.பின்னர் அவர் கூறியதாவது:கம்பன் கழகம் மிகத் தொன்மையானது. போற்றுதலுக்குரியது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி. நாகலாந்து இயற்கை எழில் நிறைந்த மாநிலம். ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் போராடினார்கள். மோடி பிரதமராக வந்த பின்பு அந்த போராளிகளுக்கும் அரசுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. நாங்கள் ஆயுதம் ஏந்த மாட்டோம் என்று கூறினர். அதை உண்மையாக கடைபிடிக்கின்றனர். பிற மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் போல நாகலாந்திலும் சில பிரச்னை உள்ளது. அதனை மாநில முதல்வர் தீர்த்து வைப்பார், என்றார்.தொடர்ந்து கவர்னர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறிப்பு கேட்டபோது, காது வேலை செய்ய மாட்டேங்குது. மெஷின் மாட்ட வேண்டும் என்று நகைச்சுவையுடன் கூறிவிட்டு கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ