உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / l சிவகங்கை சாஸ்திரி தெருவில் மழை நீர் l வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு

l சிவகங்கை சாஸ்திரி தெருவில் மழை நீர் l வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு

சிவகங்கை நகராட்சி 7வது வார்டில் உள்ளது சாஸ்திரி 5 வது தெரு. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தாழ்வான பகுதி என்பதால்மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த சில தினங்களாக பெய்த மழையால் 7வது வார்டில் மீனாட்சி நகர், சாஸ்திரி தெரு உள்ளிட்ட பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இங்கு மழைநீர் வடிகால் இல்லை. வீடுகளுக்கு இடையிலும் ரோட்டிலும் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உருவாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் மீனாட்சி நகர், சாஸ்திரி தெரு உள்ளிட்ட பகுதியில் மழைநீர் வடிகால் கட்டி மழைநீர் தேங்கவிடாமல் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முத்துகாளி கூறுகையில், சாஸ்திரி 5வது தெரு பகுதி நகரின் விரிவாக்க பகுதி. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மழைநீர் வடிகால் கிடையாது. மழை பெய்தால் தண்ணீர் அனைத்து வீட்டையும் சுற்றி தேங்கி நிற்கும். இந்த தண்ணீரில் கொசு உருவாகி இந்த பகுதி மக்களுக்கு காய்ச்சல் உருவாகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னும் மழைக்காலம் இருப்பதால் தேங்கி இருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும். மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் தண்ணீர் வெளியேற வடிகால் அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை