நில அளவைத்துறையினர் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் நில அளவை துறையினர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நில அளவைத் துறையில் ஆய்வாளர், துணை ஆய்வாளர் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும். நில அளவையர்களுக்கு தகுதியின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து நேற்று தமிழக அளவில் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் நில அளவைத் துறையினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 தாசில்தார் அலுவலகங்களில் பணிபுரியும் நில அளவை துறையினர் அரசு பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை தாசில்தார் அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு கோட்டகிளை தலைவர் பிச்சை தலைமை வகித்தார். துணை தலைவர் முத்துலட்சுமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.