உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கடிதம் எழுதும் போட்டி

கடிதம் எழுதும் போட்டி

சிவகங்கை:இளைய தலைமுறையினரிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்வதற்கு இந்திய தபால் துறையால் ஆண்டு தோறும் கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான கடிதம் எழுதும் போட்டி எனது முன்மாதிரிக்கு கடிதம் என்ற தலைப்பில் நடக்கிறது. 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டி நடக்கிறது. ஏ4 அளவு காகிதத்தில் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது இன்லேண்ட் கடிதத்தில் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் கடிதம் எழுத வேண்டும். எழுதிய கடிதத்தை தலைமை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடிதம் அனுப்ப வரும் டிச.8 கடைசி நாள். தமிழக அளவில் சிறந்த 3 கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். அந்த கடிதங்கள் தேசிய அளவிலான போட்டிக்கும் அனுப்பப்படும். தேசிய அளவில் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். தமிழக அளவில் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் தேசிய அளவில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை