கட்டட தொழிலாளியை கொன்றவருக்கு ஆயுள்
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள சோழபுரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் லோகநாதன் 57. கட்டட தொழிலாளி. இவர் 2021 ஜூலை 21ல் சோழபுரத்தில் ஒரு வீட்டில் கட்டுமான பணி செய்தார். அதே பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் 40, உடன் வேலை செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம்அடைந்த லோகநாதன் அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து பன்னீர்செல்வம் தலையில் தாக்கியதில் அவர் இறந்தார்.லோகநாதனை சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. லோகநாதனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5ஆயிரம் அபராதமும்விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ நடராஜன்தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அழகர்சாமி ஆஜரானார்.