உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் சாலையோர கடைகள் அமைக்க இடம் தேர்வு

தேவகோட்டையில் சாலையோர கடைகள் அமைக்க இடம் தேர்வு

தேவகோட்டை: அரசு சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்த கடைகளை அமைத்து விற்பனை செய்யும் பகுதியையும், நகரில் இடநெருக்கடி பகுதிகளில் கடை அமைக்க தடை செய்யும் பகுதிகளையும் தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது. தேவகோட்டையில் சாலையோர கடைகள் அமைத்து விற்பனை செய்யக் கூடிய மண்டலமாக சிலம்பணி ஊருணி சாலை, வெள்ளையன் ஊருணி சாலை, சிவகங்கை ராஜா சாலை, அழகப்பா பூங்கா அழகாபுரி நகர் பகுதிகள். கடைகள் அமைக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாக நகராட்சி பேருந்து நிலையம் பகுதி, தினசரி மார்க்கெட் பகுதி, தியாகிகள் சாலை, சிலம்பணி சன்னதி தெரு, வாடியார் வீதி, தியாகிகள் பூங்கா சுற்றிலும், சரஸ்வதி வாசகசாலை தெரு, கண்டதேவி சாலை, திருப்புத்துார் ரோடு பகுதிகள். சாலையோர கடைகள் அமைக்க நகராட்சி தேர்வு செய்த, தடை செய்யப்பட்ட பகுதிகள் அனைத்துமே போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதிகள் என்பது குறிப்பிட தக்கது. இரண்டு பிரிவுகளாக கடைகளுக்கு ஆண்டு கட்டணம், பராமரிக்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ