உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை மானிக்கு பூட்டு

மழை மானிக்கு பூட்டு

திருப்புவனம் : தினமலர் செய்தியை அடுத்து திருப்புவனத்தில் மழை மானிக்கு பேரூராட்சி சார்பில் பூட்டு போட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண் துறை சார்பில் தாலுகா அளவில் நவீன மழைமானி அமைக்கப்பட்டது. தானியங்கி முறையில் இயங்கும் மழைமானியில் இருந்து தினசரி கணினிக்கு மழை அளவு, வெயில் அளவு, காற்று வீசும் வேகம் உள்ளிட்டவை அனுப்பப்படும். திருப்புவனம் தாசில்தார் குடியிருப்பு அருகே அமைக்கப்பட்ட மழை மானியை சுற்றிலும் இரும்பு வேலி, கதவு உள்ளிட்வை அமைக்கப்பட்டன. இவ்வளவு ஏற்பாடு செய்த அதிகாரிகள் மழைமானி கதவிற்கு பூட்டு போடாமல் இரும்பு நட்டுகளை வைத்து பூட்டியிருந்தனர். இதுகுறித்து தினமலர்நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் புதிய பூட்டு வாங்கி மழை மானியை பாதுகாப்பாக பூட்டி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை