உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெடுஞ்சாலை பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

நெடுஞ்சாலை பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

திருப்புத்துார்: ருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற விறகு லாரி திடீர் பள்ளத்தில் விழுந்து சரிந்தது. திருப்புத்துார் ஒன்றியம் வாணியம்பட்டி பகுதியிலிருந்து விறகு ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு திருப்பூருக்கு சென்ற லாரி, திருமயம் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் சென்றது. காரைக்குடி ரோடு சந்திப்பு அருகே செல்லும் போது திடீரென்று ரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரம் இறங்கி லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பினர். குடிநீர்த் திட்டப்பணிக்காக ரோட்டிற்கு கீழே குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் மேல் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு லாரி கவிழ்ந்தது தெரியவந்தது. லாரியில் வந்த தொழிலாளர்கள், டிரைவர் காயமின்றி தப்பினர். இரண்டு டிராக்டர்கள் உதவியுடன் லாரியை பள்ளத்திலிருந்து மீட்டனர். குடிநீர் திட்ட பணிகள் சரியான தொழில்நுட்ப கணிப்பு இல்லாத பணியால் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டது குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை