மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் கால்வாய் சிலாப் சேதம்
சிவகங்கை: மதகுபட்டி பஸ் ஸ்டாண்டில் கால்வாய் மூடி சேதமடைந்துள்ளதால் பயணிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை - திருப்புத்துார் ரோட்டில் மதகுபட்டி ஊராட்சி உள்ளது. இங்கு போதிய பஸ் வசதியின்றி, ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி வந்தனர். பஸ் ஸ்டாண்ட் இன்றி சிரமம் அடைவதாக ஊராட்சிக்குட்பட்ட மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து மதகுபட்டியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டினர். இந்த பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் மழைக்காலங்களில் மண்மலை காட்டில் உற்பத்தியாகும் மழை நீர் பஸ் ஸ்டாண்ட் கட்டியுள்ள இடத்தில் உள்ள கால்வாய் வழியாக பூங்குடி கண்மாய்க்கு செல்கிறது. இக்கால்வாய்க்கு மேல் பஸ் ஸ்டாண்ட் கட்டும்போது, பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் தெற்கு பகுதியில் சிமென்ட் சிலாப் போடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த சிலாப் உடைந்து, பஸ் ஸ்டாண்டிற்குள் கால்வாய் பள்ளமாக காட்சி அளிக்கிறது. இரவில் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்வோர் கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளாகும் அச்சம் நிலவுகிறது.