உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சித்திரை திருவிழா மே 17ல் சந்தனகாப்புடன் நிறைவு

மானாமதுரை சித்திரை திருவிழா மே 17ல் சந்தனகாப்புடன் நிறைவு

மானாமதுரை: சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா 12ம் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வைகை ஆற்றுக்குள் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் அழகர் பத்தி உலாத்தல் நிகழ்ச்சி,வைகை ஆற்றில் நிலாச்சோறு நிகழ்ச்சி நடந்தது.நேற்று தசாவதார நிகழ்ச்சிக்காக வீர அழகர் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பின்னர் கோர்ட்டார் மண்டகப்படிக்கு எழுந்தருளினார். நாளை மறுநாள் 17ம் தேதி சந்தனக்காப்பு உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை