உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரை நகராட்சி கூட்டம்

 மானாமதுரை நகராட்சி கூட்டம்

மானாமதுரை: மானாமதுரை நகராட்சி கூட்டம் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார்.கமிஷனர் கோபாலகிருஷ்ணன், பொறியாளர் பட்டுராஜன், மேலாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் வரவேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் கடந்த சில மாதங்களாக மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போடப்படும் தார் மற்றும் சிமென்ட் சாலைகள் மிகவும் தரமற்று இருப்பதால் அதனை உடனடியாக சரி செய்து தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தெய்வேந்திரன், அ.தி.மு.க., கவுன்சிலர்: வார்டுக்குட்பட்ட பகுதியில் வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் ஸ்டேட் பாங்க் அருகில் கழிவுநீர் தேங்கி நிற்பதை சரி செய்ய வேண்டும். நம் கோடி(எ) முனியசாமி பா.ஜ., கவுன்சிலர்: மேட்டுதெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட ரோட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை