உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

திருப்புவனம் : லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் மார்கழி மாதம் மண்டல பூஜையும் 108 சங்காபிஷேகமும் நடைபெறும், இந்தாண்டு திருவிழா நாளை ஜன. 2, நடைபெற உள்ளது. காலை 9:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் தொடங்குகின்றன.அதன்பின் நாகராணி அம்மையார் 45 நாட்கள் விரதமிருந்து உடைமுள், இலந்தை முள், காட்டு கருவேல மர முள் உள்ளிட்ட பல்வேறு வகையான முட்கள் கொண்ட ஏழு அடி உயர முள் படுக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார்.ஜன. 14ம் தேதி மாலை ஆறு மணிக்கு பூச்சொரிதல் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை