மேலும் செய்திகள்
அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு
03-Aug-2025
காரைக்குடி : கல்லல் அருகே உள்ள பொய்யலுாரில் கரியமாணிக்க பெருமாள், ஆதீனமிளகி அய்யனார், காளியம்மன் கோயில் மது எடுப்பு விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ராமநாதபுரம். சிவகங்கை. மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. தொழுவத்தில் 200க்கும் மேற்பட்ட காளைகளும் வயல்வெளிகளில் கட்டுமாடுகளாக 100க்கும் மேற்பட்ட காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. காளை முட்டியதில் 5 பேர் காயம் அடைந்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
03-Aug-2025