உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவ சான்றிதழ் பாடப்பிரிவு தகுதி பட்டியல் வெளியீடு

மருத்துவ சான்றிதழ் பாடப்பிரிவு தகுதி பட்டியல் வெளியீடு

சிவகங்கை : மருத்துவ சான்றிதழ் பாடப்பிரிவுக்கான தகுதி பட்டியல் வெளிடப்பட்டுள்ளதாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தெரிவித்தார். அவர் கூறுகையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் 2025=-26ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் காலியாக உள்ள மயக்க மருந்து டெக்னீசியன் 18, தியேட்டர் டெக்னீசியன் 19 இடங்கள் மாவட்ட அளவில் நிரப்புவதற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிப்பட்டியல் www.gsmch.ac.inவலைத்தளத்திலும் கல்லுாரி அறிவிப்பு பலகையிலும் வெளியிடப் பட்டுள்ளது. தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் தங்களது அசல் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் செப்.20க்குள் அல்லது அதற்கு முன்னதாகவே மருத்துவக் கல்லுாரி முதல்வர் அலுவலகத்தை அணுகி சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை