உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவத்துறை அலுவலர் சங்க கூட்டம்

மருத்துவத்துறை அலுவலர் சங்க கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் மத்திய செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. மாநிலத் தலைவர் தேசிங்கு ராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முத்துரமேஷ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ரமேஷ்கண்ணன், மாநில இணைச்செயலாளர் சிங்காரவேலன், மாவட்ட தலைவர் ராஜகுமார் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநிலத்தலைவர் துரைப்பாண்டி, முன்னாள் மாநிலத்தலைவர் தண்டபாணி, முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பொன்னுப்பாண்டி, முன்னாள் மாவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட தலைவர் ரவி பேசினர்.சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் அருண், பொருளாளர் ஜெயபாண்டி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுகன்யா, மாவட்டத் துணைத் தலைவர் ஷர்மிளா, மாவட்ட பிரச்சார செயலாளர் ஜெரால்டு இருதயராஜ், மாவட்ட இணைச் செயலாளர்கள் மாரிமுத்து, நடேசன், நித்யானந்தன், காந்திமதி, பூமிராஜ், பாண்டீஸ்வரி, மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் ராமநாதன், செல்வகுமார், மாவட்ட மத்திய செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வகுமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்கள் சீதாலெட்சுமி, குணசுந்தரி உள்ளிட்டோர் பதவி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை