மதகுபட்டியில் குரங்குகள் தொல்லை
சிவகங்கை: மதகுபட்டியில் உணவு தேடி குடியிருப்பு பகுதியில் வரும் குரங்குகள் ரகளையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை அருகே மதகுபட்டியில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திருகின்றன. இவை பூட்டியிருக்கும் வீடுகளில் கூட்டமாக ஓட்டை பிரித்தும் ஜன்னல் வழியாகவும் நுழைந்து சமையலறையில் உணவுப்பொருட்களை எடுப்பது, அவற்றை சிதறிவிட்டு செல்வதும் தொடர்கிறது. வீடுகளில் ஆட்கள் இருந்தாலும் பயமின்றி உள்ளே நுழைகின்றன. கூட்டமாக வருவதால் அவற்றைத் தடுக்க முடியவில்லை. விரட்டினால் கடிக்கின்றன. சில வீடுகளின் கூரையையும் சேதப்படுத்துகின்றன. வீட்டில் உள்ள செல்ல பிராணிகளை தாக்குகிறது. குரங்குகளை பிடிக்க வேண்டும்.