உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மும்முடிநாதர் கோயில் கும்பாபிேஷகம் பிப்., 24 ல் நடக்கிறது

மும்முடிநாதர் கோயில் கும்பாபிேஷகம் பிப்., 24 ல் நடக்கிறது

தேவகோட்டை : தேவகோட்டை அருகே இறகுசேரியில் தமிழ் முறைப்படி மும்முடிநாதர் கோயில் கும்பாபிேஷகம் பிப்., 24 ல் நடைபெற உள்ளது.இங்கு பல நூறு ஆண்டுக்கு முற்பட்ட சவுந்திரநாயகி சமேத மும்முடிநாதர் கோயிலில், ராமர் பூஜை செய்த தலமாக கருதப்படுகிறது.இக்கோயிலில் தலையில் முடி போன்ற கோடுகளுடன் லிங்கம் உள்ளது. இக்கோயில் கும்பாபிேஷகம் பிப்., 24 அன்று காலை 7:00 மணிக்கு புலவர் சென்னியப்பனார் தலைமையில் மாசி மகத்தன்று நடக்கிறது. குமரலிங்கம் தலைமையில் சைவ திருமுறையினரால் பிப்., 22ம் தேதி தமிழ் முறைப்படி நான்கு கால வேள்வி பூஜைகள் நடைபெறும்.கும்பாபிேஷக ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் லட்சுமணன், கல்லுாரி தலைவர் லட்சுமணன், திருப்பதி திருக்கல்யாண டிரஸ்ட் செயலர் பாலன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ