உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தேசிய ரத்த தான தினம்

 தேசிய ரத்த தான தினம்

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த மையம் மற்றும் அரசு காரைக்குடி தலைமை மருத்துவமனை ரத்த மையம் இணைந்து மருத்துவக் கல்லுாரியில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை கொண்டாடினர். கல்லுாரி முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவ கண்காணிப்பாளர் தங்கத்துரை, நிலைய மருத்துவர் முகமது ரபிக், ஏ.டி.எஸ்.பி., சுகுமார் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பொற்கொடி தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மற்றும் ரத்ததான ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்று, கேடயம், மற்றும் பதக்கங்களை வழங்கினார். உதவி நிலைய மருத்துவர் தென்றல், நோய்க் குறியியல் துறை தலைவர் சர்மிளா திலகவதி, இணைப்பேராசிரியர் விஜயலட்சுமி, ரத்த மைய மருத்துவ அதிகாரி சித்துஹரி, ரத்த மைய செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்கள் மற்றும் ரத்த மைய ஆலோசகர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ