உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருளில் தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டுனர்கள் அவதி

இருளில் தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டுனர்கள் அவதி

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாமல் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். திருப்புத்துார் வழியாக திருமயம் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதன் புறவழிச்சாலை திருப்புத்துார் அருகே என்.புதுார்,தென்மாப்பட்டு,புதுக்காட்டாம்பூர் வழியாக செல்கிறது. இதன் 3 சந்திப்புக்களிலும் உயர்மின்கோபுர விளக்கு நிறுவப்பட்டுள்ளது. இதில் அனைத்து மின் விளக்குகளும் எரிவதில்லை. சில மின்விளக்குகளே எரிகிறது. இந்த சந்திப்புக்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். புதுக்காட்டாம் சந்திப்புக்கு அடுத்துள்ள உயரமான பெயர் பலகையிலும் விளக்குகள் எரியாததால் எந்த திசையில் செல்வது வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் மின்விளக்குகளை எரியவைக்கவும், உயரமாக நிறுவப்பட்டுள்ள ஊர் பெயர் பலகைகளில் மின் விளக்குகள் எரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை