அனைத்து நீதிமன்றங்களில் இன்று தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்
சிவகங்கை: அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று காலை 10:00 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்ற (லோக் அதாலத்) முகாம் நடைபெறும் என சிவகங்கை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) இன்று அனைத்து நீதிமன்றங் களிலும் நடைபெறுகிறது. இதில் மோட்டார் வாகன விபத்து, நஷ்ட ஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு, உரிமையியல் வழக்கு, குடும்ப பிரச்னை, தொழிலாளர் பிரச்னை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்கு களுக்கு தீர்வு காணப்படும். தேசிய மக்கள் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பின் மேல்முறை யீடு செய்யமுடியாது. அதேபோன்று நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். இதனால் நீதிமன்றம் வருவதற்கான கால விரயம், செலவு தவிர்க்கப்படும். எனவே இன்று காலை அனைத்து நீதிமன்றங்களிலும் நடக்கும் 'லோக் அதாலத்' முகாமில் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.