உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேசிய தபால் வார விழா

தேசிய தபால் வார விழா

சிவகங்கை : அனைத்து தபால் நிலையங்களிலும் அக்., 10 ம் தேதி வரை தேசிய தபால் வார விழா கடைபிடிக்கப்படுவதாக சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தபால் துறையின் சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அக்.,9ல் தேசிய தபால் வார விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான தேசிய தபால் வார விழா அக்., 6ல் துவங்கி 10 வரை நடைபெற்று வருகிறது. இதில், தபால் சேவையில் தொழில்நுட்ப விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நிதி சேர்க்கை தினம், தபால் தலை சேகரிப்பு தினம், உலக தபால் தினம், வாடிக்கையாளர் தினம் என கடைபிடிக்கப்பட உள்ளது. இந்த வார விழாவில் தபால் நிலையங்களில் ஆதார் சேவை, ஆயுள் காப்பீடு திட்டம், சேமிப்பு கணக்குகள் துவக்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ