உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில்களில் செப். 22ல் நவராத்திரி விழா ஆரம்பம்

கோயில்களில் செப். 22ல் நவராத்திரி விழா ஆரம்பம்

மானாமதுரை: மானாமதுரை, தாயமங்கலம் கோயில்களில் வரும் 22ம் தேதி நவராத்திரி விழா துவங்குகிறது. சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் வரும் 22ம் தேதி நவராத்திரி திருவிழா துவங்குகிறது. கோயில் வளாகம் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் மற்றும் வாள் மேல் நடந்த அம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் நவராத்திரி விழாவிற்காக தயாராகி வருகின்றனர். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாக்களின் போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற உள்ளன. தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 23ம் தேதி மாலை 4:30 மணிக்கு 108 சங்காபிஷேகமும்,26ம் தேதி திருவிளக்கு பூஜையும்,அக்.1ம் தேதி சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை, 2ம் தேதி விஜயதசமி பூஜை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி